
இருசக்கர வாகனம் வாங்க பணம் கேட்டு திருச்சி பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை.
திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் பகுதியில் வசித்து வருபவர் விஜயா (38). இவரது மகன் மணிகண்டன் (19) துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று தன்னுடைய தாய் விஜயாவிடம் இரு சக்கர வாகனம் வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு விஜயா தற்காலிகமாக மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் மணிகண்டன் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

