
ரூ. 1.60 லட்சம் கடனுக்கு
ரூ. 33 லட்சம் வட்டியுடன் திரும்ப கேட்கும் பைனான்ஸ் அதிபர்.
வியாபாரி குடும்பத்துடன் ஐ.ஜி. யிடம் புகார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன் ( வயது 53).
இவர் அந்த பகுதியில் ஹாலோ பிளாக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 10 வருடத்திற்கு முன்பு தனக்கு சொந்தமான ஒரு வீட்டுமனை ஆவணத்தை அடமானமாக வைத்து ஒரு 1.60 லட்சம் கடன் பெற்றார்.
இந்த நிலையில் கடன் கொடுத்த பைனான்ஸ் அதிபர் ரூ. 33 லட்சம் வட்டியுடன் பணத்தை திருப்பி தர வேண்டும் எனக்கேட்டு அந்த வீட்டுமனையை தனது பெயருக்கு மிரட்டி கிரயம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அழகப்பன் இன்று திருச்சி அலுவலகத்தில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வந்து புகார் மனு அளித்தார்.
அதில், அந்த வீட்டு மனை ஒன்று தான் தங்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அதனை முறைகேடாக நிதி நிறுவன அதிபர் அபகரிக்க முயற்சி செய்கிறார்.
மிரட்டி செய்த கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார்.

