Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாலையில் சாய்ந்த மின் கம்பம்.பெரும் விபத்து தவிர்ப்பு.

0

'- Advertisement -

 

திருச்சி புதுக்கோட்டை சாலையில் காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள்
சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து,

திருச்சி மாநகராட்சி சார்பில், சாலையின் மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்கள் நேற்று மாலை காற்றில் சாய்ந்து விழுந்தன. இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் பொலிவுறு நகரத்திட்டத்தின் கீழ் சாலையில் மையத் தடுப்புகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே, புதுக்கோட்டை சாலையின் மையத் தடுப்பில் (சென்டர் மீடியன்) அமைக்கப்பட்டிருந்த மின் கம்பங்களில் 6 நேற்று மாலை 4 .30 மணியளவில் காற்றில் சாய்ந்தன. அதிர்ஷ்ட வசமாக மின்கம்பங்கள் சாலையில் விழுந்த நேரம் அந்தப் பகுயில் கனரக வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.

சம்பவம் குறித்து பொதுமக்களின் தகவலின் பேரில் மின்வாரியம் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து சென்று ஒடிந்து சாய்ந்த மின்கம்பங்களை துண்டித்து போக்குவரத்தை சீராக்கினர்.

இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட் மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டன.


இது குறித்து அப்பகுதியில் நின்றிருந்த கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓருவர் கூறுகையில், காற்றில் திடீரென மின்கம்பங்கள் தீப்பொறியுடன் சாந்தது அதிர்ச்சியாக இருந்தது. லேசான காற்றுக்கே இந்த நிலை என்றால் பலத்த காற்று வீசினால் மீதியுள்ள கம்பங்கள் எவ்வாறு தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை என்றனர். சாதாரன காற்றுக்கே மின்கம்பங்கள் சாய்கின்ற நிலையில் உள்ளனவா? அல்லது வேறு ஏதேனும் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதா என்ற கோணங்களில் மாநகராட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.