திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச்சங்க கூட்டம் மாநிலத் தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
திருச்சியில்
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நல சங்க கூட்டம் மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அருண் ஹோட்டலில் 2-மாநில செயற்குழு மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் எஸ்.கே.பி சுரேஷ் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தமிழக அரசிடம் கோர வேண்டிய கோரிக்கைகள் பற்றி தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பேசும்போது,
சீட் பெர்மிட் பன்னிரெண்டு 19, 21 சீட் பெர்மிட்டுக்களுக்கும், போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவலர்கள் வாகனங்களின் என்னை பதிவு செய்து வைத்துக் கொண்டு வாகனம் செல்லாத காலங்களில் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலனை காத்திட சங்கத்தின் சார்பில் தமிழக அரசிடம் இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்வதாக பேசினார்.
இதில் மாநில செயலாளர் முத்துக்குமார், மாநில பொருளாளர் சக்தி பாண்டியன், மாநில துணைச் செயலாளர் தங்கராஜ், மாநிலத் துணைத் தலைவர் ரவி என்கிற மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹரி ஓம் பாபு, மாநில அமைப்பாளர் அரியலூர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் 38 மாவட்டங்களிலிருந்து பல்வேறு
பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.