பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல்: வீர முத்தரையர் சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமாரை கைது செய்யக்கோரி பெண் திருச்சி ஜ.ஜி.அலுவலகத்தில் பரபரப்பு புகார்.
சென்னையில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா (க|பெ) பொன்னழகன் இன்று திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி 14 வருடம் ஆகிவிட்டது. 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நான் பொது சேவையும்,மக்கள் பணியும் ஆற்றி வருகிறேன். எனவே, நான் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு சென்று கல்விக்காகவும் முத்தரையர் சமுதாய மக்களுக்கும் விழிப்புணர்வு செய்து வருகின்றேன்.
நான் முத்தரையர் சமுதாய பெண்மணி. அனைத்து சாதியினருக்கும் மக்கள் சேவை செய்து வருகிறேன். இதனை நீ செய்ய கூடாது என்று வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் K.K.செல்வக்குமார் என்பவரின் தூண்டுதலின் பெயரில் அவர்களது பொறுப்பாளர்கள் என்று சொல்லி என்னை பல மாவட்டங்களில் இருந்து கொலை மிரட்டல்களும் மற்றும் தொலைபேசி, வாட்ஸாப் மற்றும் முகநூலிலும் வாயிலாக பாலியல் தொந்தரவு செய்து என்னுடைய புகைப்படத்தை தவறுதலாக பயன்படுத்தியும் பல ID களில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து என்னை அசிங்கப்படுத்தியும், அவமானப்படுத்தியும் வருகின்றனர்.
எனவே, வீர முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் K.K.செல்வக்குமார் மற்றும் அவர்களது பொறுப்பாளர் என்னைப்பற்றி அவதூறு பரப்பிய அனைத்து நபர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என சத்தியா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.


