ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
திருச்சியில் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்பு.
திருச்சி ரோட்டரி கிளப்பின் 9வது புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மற்றும் புனித வளனார் கல்லூரியின் ஷெப்பர்ட் மையத்துடன் இணைந்து செயலாற்றியவர்களுக்கான விருது வழங்கும் விழா திருச்சி புனித வளனார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக
ரோட்டரியின் முதல் பெண் கவர்னர் ஆனந்தாஜோதிராஜ்குமார் கலந்துகொண்டு புதிய நோட்டரி தலைவராக பாலாஜி, செயலாளராக பிரதீப்குமார் ஆகிய இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் புனித வளனார் கல்லூரி ஷெப்பர்ட் இயக்குனர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் செப்பர்டு மையத்துடன் இணைந்து சமூக பணியாற்றிய பேராசிரியர் மற்றும் பொது மக்களுக்கு ஷெப்பர்ட் சமூக சேவையின் செய்திகளை கொண்டு சென்ற தனியார் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் ஜான்கண்ணா மற்றும் சமூக சேவர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரி சங்கத்தின் மண்டல செயலாளர் மோகன்குமார்,
துணை கவர்னர் முருகானந்தம், கல்லூரி பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜ் செய்திருந்தார்.