தமிழகத்தில் முதன்முறையாக
திருச்சி மாவட்ட அதிகாரிகளுக்கு நவீன வாக்கி டாக்கி.
தமிழகத்தில் முதன்முறையாக திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறைகளில் பணியாற்றம் மாவட்ட அளவிலான அதிகாரிகள் 33 பேருக்கு பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.10.23 லட்சம் மதிப்பில் அதிவிரைவு தகவல் தொடர்புக்காக ‘புஷ் டூ டாக்’ என்ற வாக்கி டாக்கி வாங்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கி டாக்கி கருவி, மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், 4 வருவாய் கோட்டாட்சியர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ( கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்காக ), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், 11 தாசில்தார்கள், 14 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது இணையதள இணைப்புடன் உள்ளதால் நாட்டின் எப்பகுதியில் இருந்தும் தொடர்பு கொள்ள முடியும். மேலும் இதில் கேமிரா இணைப்பும் உள்ளது. மாவட்ட கலெக்டர் ஒரே நேரத்தில் அனைவருடனும் தொடர்பு கொள்ள முடியும்.
இதன் மூலம் அதிவிரைவு தகவல் ஏற்படுத்தப்பட்டு, அவசரகாலப் பணிகளை திறம்படச் செய்திட ஏதுவாகும். பேரிடர் காலங்களில் இதன் பயன்பாடு மிக முக்கியமானதாக அமையும். இவற்றை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அதிகாரிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.அபிராமி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ்குமார், பேரிடர் மேலாண்மைத்திட்ட தாசில்தார் ஸ்ரீதர் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.