திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகின்ற சிறப்பு முகாமில் வெளிநாட்டில் உள்ள அகதிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்களை தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யாமல் வைத்திருப்பதாக பல கட்ட போராட்டங்களை அவர்கள் நடத்தி வந்தனர். இதனை அடுத்து சிறப்பு முகாமில் இருந்து இன்று 16 பேர் யாழ்ப்பாணம்,
மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை,
விடத்தத்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழர்களான சுதர்சன், சிவசங்கர், பிரான்சிஸ் சேவியர், ரீகன், பிரேம்குமார், நிரூபன், மகேந்திரன், ரிஜிபன், எப்சிபண், மதன்குமார், சௌந்தராஜன், டேவிட் ராஜன், தேவராஜ், கிருபரசா, திலீபன், நகுலேஷ் ஆகிய 16 பேர் விடுவிக்கப்பட்டுனர்.
அதை தொடர்ந்து இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு முகாமிற்கு வருகை தந்து அகதிகளிடம் உரையாடினார்.
பின்னர் சிறப்பு முகாமில் இருந்து விடுதலை பெற்றவர்களிடம் நீங்கள் விடுதலை ஆன பிறகு உங்கள் நாட்டிற்கு சென்று நல்ல முறையில் வாழ வேண்டும். எந்தவித பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்று வாழ்த்தி விடுதலை பெற்றவர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த முகாமில் தங்கி இருக்கும் அனைவரின் கோரிக்கைகள் குறித்தும் கட்டாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.