திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பினை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்பாட்டம்.
சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்த்தும்,
வணிகர்களிடம் 200சதவீத அபராத தொகையை வசூல் செய்வதை ரத்துசெய்ய கோரியும், எடைபாலம் அருகில் லோடு வாகனங்களிடம் ரூ.3ஆயிரம் முதல் 3 லட்சம் வரை அதிகாரிகள் மிரட்டி பணம் வசூலிப்பதை கண்டித்தும்,
சிறுகுறு வணிகர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமான ஜிஎஸ்டி வரிவிதிப்பினை தடுத்து நிறுத்தி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மாணம் நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தியும் திருச்சி பாலக்கரையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் ரவிமுத்துராஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் எஸ்.பி.பாபு முன்னிலை வகித்தார்.
இதில் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமண்ட் ராஜா வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின் அவர் கூறும்போது,
பிளாஸ்டிக் பை மற்றும் குட்கா விற்பனையினை வியாபாரிகள் விரும்பி செய்வதில்லை.
இதனை உற்பத்தி செய்யப்படும் மற்றும் கொண்டு வரும் வழியிலேயே பறிமுதல் செய்யும் நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும். மாறாக வணிகர்கள் மீது அடக்குமுறை ஏவக்கூடாது,
வணிகர்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை… வணிகர்களுக்கு பாதுகாப்புக்காக கொண்டுவரப்படும் ‘ஆப்கள்'(செயலிகள்) ஆப்பு வைப்பதாகவே உள்ளது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் டி.கணேசன், மாநிலத் துணைத் தலைவர் ராஜாராம், சரவணன், கண்ணன் ஹக்கிம், காதர்,பாஸ்கர், சபி,நவ்ஷாத், சலாவுதீன், கனகராஜ், வேல்முருகன், மீரான்,சன் நசீர், கோவில் பிச்சை ,பூபதி மற்றும் திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.