திருச்சி மாநகரில் கஞ்சா செடி அழிப்பு.காவல் துறையினர் விழிப்புடன் பணியாற்ற பாரதிய ஜனதாக் கட்சியினர் வேண்டுகோள்.
திருச்சி மாநகர மையப்பகுதியான பாலக்கரையில் கஞ்சா செடி வளர்ப்பது வருவது குறித்து தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் போதை பொருள் ஒழிப்பு சிறப்பு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா செடிகளை பிடுங்கி எறிந்தனர். மேலும் அங்கு கஞ்சா செடிகளை வளர்த்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகரின் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை ஆகின்றது என்பது பலரும் அறிந்ததே.அவ்வப்போது கஞ்சா விற்றவர்கள் கைது என்ற செய்தியும் வெளிவருகிறது.
கஞ்சா வெளிமாநிலங்களிலும்,புறநகர் பகுதிகளிலும் மட்டுமே பயிரிட்டு வந்த நிலையில் திருச்சி மாநகரில் கஞ்சா பயிரிட்டு இருப்பதை அறிந்து நெஞ்சம் பதறுகிறது.
எனவே இனியாவது திருச்சி மாவட்ட நிர்வாகமும், திருச்சி மாவட்ட காவல் துறையினரும் விழிப்புடன் பணியாற்றி இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கஞ்சா விற்பனை செய்வதையும், கஞ்சா வளர்ப்பதையும் முன்கூட்டியே தடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.