
திருச்சி பாலக்கரை அருகில்
ஆண் பிணம்.
திருச்சி பாலக்கரை மேம்பாலத்தின் கீழ்புறம் உள்ள காவேரி தியேட்டர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. சுமார் 65 வயது இருக்கும். இதுகுறித்து கொட்டப்பட்டு செங்குளம் கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜ் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார் .
புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை
.இது குறித்து பாலக்கரை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

