
திருச்சி அரியமங்கலத்தில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை போக்சோவில் கைது.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியில் 9 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருடைய தந்தை கடந்த 31ஆம் தேதி மது போதையில் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக சிறுமியின் தாய் பொன்மலை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

