திருச்சி அரியமங்கலத்தில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை.
எலி மருந்து சாப்பிட்டு சாவு
திருச்சி அரியமங்கலம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் செந்தில் ராஜ் ( வயது 39). திருமணம் ஆகாத வாலிபர் .
குடிப்பழக்கம் உடையவர்.
திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அவர் சம்பவத்தன்று எலி மருந்து சாப்பிட்டார்.
இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செந்தில்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.