தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள்
திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை.
தமிழ்நாடு மூத்தோர் தடகளம் சார்பில் 41- ஆவது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட கலெக்டர் போட்டிகளை தொடங்கிவைத்தார்.இந்திய மாஸ்டர்ஸ் தடகள தலைவர் ஜெய்சிங் புரா அஹாடு /தெலுங்கானா அமரேந்திர ரெட்டி, தமிழ்நாடு பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, ரங்கநாத நாயுடு, தமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் இருந்து சுமார் 1200 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
திருச்சியிலிருந்து டி.என்.எம்.ஏ.துணைத் தலைவர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்பட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கேப்டன் சுபாஷ் ராமன் உள்பட 21 போட்டியாளர்கள் பங்கு பெற்று தங்கப் பதக்கம், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
ஆறு தங்கமும், நான்கு வெண்கலமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.மூத்தோர் தடகளப் போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.