திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்ப்பட்ட அலுவலகத்தை தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் திறந்து வைத்தார்.
திருச்சி நத்தஹர்வலி தர்கா புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தர்கா அலுவலகத்தில் தலைமை அறங்காவலர் ஹாபிள் அல்லாபகஷ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் எம்.அப்துல்ரஹ்மான் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறந்து வைத்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொது அறங்காவலர்கள்ஹாட்டின் நூர்தீன், சையத், சலாவுதீன், பரம்பரை அறங்காவலர் அக்பர் உசேன், டாக்டர் அலிம், 21வது வட்ட திமுக பிரதிநிதி எம்.ஜி.சலிம்,
தமுமுக அப்துல் சமத்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாணவர் அணி செயலாளர் அன்சர் அலி,
இளைஞர் அணி அமிருதீன்,
நகரசெயலாளர் பீர் முஹம்மது, தொழிலதிபர் சிராஜ்,
தர்கா ஜமாத் செயலாளர் என்.எஸ். ஜாகிர், பரம்பரை ஆரிப் தர்கா கலிபா ஷாதாத் வக்ப் ஆய்வாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு வக்ப் தலைவர் அப்துல் ரஹ்மான் அளித்த பேட்டியில்
தமிழக வக்ப் வாரியத்திற்க்கு சொந்தமான ஆக்ரமிப்பு இடங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கபடும்,
வக்ப் வாரிய நடவடிக்கைகளில் அரசியல், ஆளுங்கட்சி குறுக்கிடு இருக்காது என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
வக்ப் வாரியம் நிச்சயம் செயல்படும் என தனது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.