ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் முன்னாள் பள்ளி ஆசிரியரிடம் இரண்டரை லட்சம் பணம் பறிப்பு.
ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் நாச்சிமுத்து (வயது 88) இவர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இன்று காலை ரங்க நகர் பகுதியிலுள்ள கனரா வங்கியில் ரூபாய் இரண்டரை லட்சம் பணம் எடுத்துக்கொண்டு அம்மா மண்டபம் பகுதியில் உள்ள தனியார் சிட்பண்ட் முதலீடு செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது இவரைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் இவரிடம் இருந்த பணப்பையை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நாச்சிமுத்து புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்