விபத்து ஏற்படும் முன் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுகோள்.
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான பச்சைமலை.
துறையூரிலிருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு, வனத்துறை செக்போஸ்ட் வழியாக மலைக்கு மேலே ஏறும் திருச்சி மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையில் உள்ள கடைசி கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களாக பெய்து வந்த மழையில் இந்த இடத்தில் உள்ள தடுப்பு சுவர் பழுதடைந்து விட்டது.
பச்சை மலைக்கு புதிதாக வரும் சுற்றுலாப் பயணிகள் உயரமான இந்த இடத்தில் நின்று சுற்றிப் பார்க்கின்றனர்.
அவ்வாறு பார்க்கும் போது சிறிது கவனக்குறைவு ஏற்பட்டால் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே இந்த கொண்டை ஊசி வளைவில் பழுதடைந்துள்ள பாதுகாப்பு சுற்று சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என்றும் மலைக்கு கீழிருந்து மேலே செல்லும் சாலையில் ஆங்காங்கே உள்ள தடுப்புச் சுவர்களுக்கு வெள்ளை நிற சுண்ணாம்பு பூசிக் கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்.
என சாலை பயனீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.