திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்குமு சார்பாக செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில் , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை தனலெட்சுமி, ஆசிரியர் பயிற்றுனர் முகமது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் இப்பேரணி நடைபெற்றது.
மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.
மாநகராட்சி 35 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி ஆசிரியர்கள், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் ,
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மாநகராட்சி பள்ளியில் அனைவரும் சேர்க்க வேண்டும் , பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் அடங்கிய பதாகை ஏந்தி செந்தண்ணீர்புரம் பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார்கள்.
இதில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய பிரசுரம் வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.
மேலும் பேரணியில் ஆட்டோ மூலமும் பிரசாரங்கள் செய்யப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியை விக்டோரியா நன்றி கூறினார்.
பேரணியில் மக்கள் சக்தி இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் வெ.ரா.சந்திரசேகர், பண்பாளர் ஆர்.கே.ராஜா , கல்வி வளர்ச்சிப் பணிக்குமு தலைவர் ஆர்.வாசுதேவன், உயர்நிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் கழகம், மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.