வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில இளைஞரணி அமைப்பாளர் வைரவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன், கொள்கை பரப்பு செயலாளர் தளவாய் ராஜேஸ் ஆகியோர் திருச்சி கலெக்டர் சிவராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகாமையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த மணிமண்டப பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்த மணிமண்டபத்தை வருகிற 23-ந்தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,347-வது சதயவிழா அன்று திறப்பு விழா செய்து அவரது பெயருக்கும், புகழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டப வளாகத்தில் தியாகராஜ பாகவதர், சர். பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபங்களும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மணிமண்டப நுழைவு வாயிலில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
இதனால் மணிமண்டப வளாகம் முழுவதும் அசுத்தம் ஏற்படுகிறது.
எனவே நாங்கள் புனிதமாக கருதும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் அருகாமையில் இருக்கும் அரசு மதுபான கடையினை உடனே இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறபபட்டுள்ளது.
மனு அளித்தபோது மத்திய மண்டல செயலாளர் குணா, செய்தி தொடர்பாளர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.