திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
திருச்சி ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில் பள்ளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மாவட்ட பொறுப்பாளர் வைரமணி ஹீசாய் பள்ளி தாளாளர்
காயத்ரி மனோத் ஆகியோர் தலைமையில்
ஜோஸ் ஆலுக்காஸ் சார்பில்10 அரசு பள்ளிகளுக்கு
தேவையான பொருட்களை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
அரசு பள்ளிக்களுக்கு தேவையான நாற்காலி, மேசை, டெஸ்க்பெஞ்சு,
மின்விசிறி, கணினி, அலமாரிகள், தொலைக்காட்சி பெட்டி,
ஸ்டீல் பெஞ்சுகள் வழங்கப்பட்டது.
ஜாய் ஆலுக்காஸ் மண்டல மேலாளர் கிரேஷியஸ் கூறுகையில் திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் சி.எஸ். ஆர் தொண்டு
உதவி நலத்திட்டத்தின் வாயிலாக அகில இந்தியா அளவில் 4.73
கோடி தொகையை சமுக நலத்திட்டங்களுக்காக 2021-2022ஆம்
ஆண்டு செலவிட்டு இருக்கிறோம்.
மேலும் வரும் வருடங்களில் இதைவிட சிறப்பாக செய்வோம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கிளை மேலாளர் லாசன்
மற்றும் நிறுவன ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.