Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த மநீம மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.

0

 

மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் கொடுப்பது வழக்கம். இவ்வழக்கம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறிது காலம் தடை பட்டிருந்தது. தற்பொழுது உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திருச்சி மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் வாரம்தோறும் மேயர் மற்றும் ஆணையர் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வருவது வரவேற்க்கதக்கது.

ஆனால் நாளை 23.05.2022ந் தேதி திருச்சி மாநகராட்சி சார்பில் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும் எதற்காக இந்த குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதற்கான பதில் இதுவரை இல்லை. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாததால் தான் இந்த குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யபட்டிருப்பதாக தெரியவருகிது. மேலும் மக்கள் நலன் சார்ந்த இவ்வாறான தொடர் நிகழ்வுகள் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படகூடாது என்பது மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டத்தின் நிலைப்பாடாகும். மேலும் இவ்வாறான திடீர் அறிவிப்பால் நெடுந்தொலைவிலிருந்து நிவாரணம் தேடி வரும் பொதுமக்கள் தான் அவதிக்குள்ளாவார்கள்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி வரும் 23.05.2022ந் தேதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றால், மாநகராட்சி ஆணையர் அல்லது இதர அதிகாரிகள் தலைமையில் மேற்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொடர்ந்து நடத்தவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் மேயர் அவர்களையும், மாநகராட்சி ஆணையர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.

என திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல்.S.R.கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.