திருச்சியில்
கஞ்சா விற்ற
வாலிபர் கைது.
சூதாட்டம் விளையாடிய 5 பேர் மீது வழக்கு.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் ஜாபர்ஷா தெரு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 25). என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் சரகம் மேல பஞ்சப்பூர் குளத்துக்கரை பகுதியில் சூதாட்டம் விளையாடியதாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சூதாட்ட கார்டுகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.