திருச்சி தெற்கு காட்டூர் குறிஞ்சி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயிலில்
கோயில் கமிட்டி,குறிஞ்சி நகர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அப்பகுதி பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கோவில் கமிட்டி கெளரவ தலைவரும், 43 வது வார்டு கவுன்சிலருமான வழக்கறிஞர் செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் விளக்குபூஜையில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பூஜைக்கு தேவையான பூஜை பொருட்களையும் வழங்கினார்.
சிறப்பான அண்ணதானமும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகர் அருள் பெற்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் இளங்கேவன், குறிஞ்சி நகர் நற்பணி மன்ற தலைவர் முகமது இக்பால் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.