திருச்சி ரயில் நிலையம் அருகே
முதன்மை தொழில்நுட்ப பொறியாளர் மீது தாக்குதல். எஸ்.ஆர்.எம்.யு நிர்வாகிகள் மீது வழக்கு.
திருச்சி கூத்தூர் மாணிக்கம் நகர் பிச்சாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 50). இவர் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சி.இ. பிரிவில் முதன்மை தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று சி.எஸ்.டபிள்யூ பிரிவில் உள்ள தனது ஓய்வறைக்கு சென்று முருகதாஸ் துணி மாற்றினார். அப்போது அங்கு இருந்த எஸ்.ஆர்.எம்.யு நிர்வாகிகள் இரண்டு பேரும் ,ரயில்வே ஊழியர் ஒருவரும் சேர்ந்து குடி போதையில் தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து முருகதாஸ் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.