திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகே எஸ்ஆர்எம்யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

எஸ்.ஆர்.எம்.யு. சார்பாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தென்னக ரயில்வேயில் மட்டும் 20,000 காலி பணி இடங்கள் உள்ள நிலையில் அவற்றை படித்த வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்காமல் ரயில்வே தொழிலாளர்களும் பொதுமக்களும் பாதுகாப்பின்றி செயல்படும் மத்திய அரசை செயல்பாடு வண்மையாக கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தும் கூட அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் வார விடுமுறை தினத்திலும் கட்டாயப்படுத்தி பணிக்கு வர செல்வதை தடுக்க வேண்டும்,
பணி நேரத்திற்கு பிறகு கூடுதலாக வேலை செய்யும் பட்சத்தில் அதற்கான ஓவர்டைம் அலவன்ஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பொன்மலை ரயில்வே பனிமலை பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

