Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.

0

'- Advertisement -

 

திருச்சியில் இளம்பெண் உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனி 14வது தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் ஜோதிகா.(வயது 19). ஐடிஐ படித்துள்ள இவர் சென்னையில் வேலை பார்த்தார்.பின்னர் கடந்த இரண்டு மாதமாக வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் ஜோதிகா திருச்சி ரயில்வே ஜங்ஷன் செல்வதாகக் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவரது தந்தை கார்த்திகேயன் பொன்மலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிகாவை தேடி வருகின்றார்.

இதே போன்று ஆந்திர மாநிலம் கர்னூல் ரோடு எஸ்.எஸ். ஸ்ரீநகர் காலனி பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரலு (வயது 48 ) என்பவர் நண்பர்களுடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வந்தார். பின்னர் ரங்கா ரங்கா கோபுரத்தின் அருகாமையில் வைத்து திடீரென மாயமானார். இதுபற்றி அவரது மகன் சிவா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.