திருச்சியில்ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் நகை திருட்டு.
திருச்சி கே.கே.நகர் நேருஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜன் (வயது 71). இவர் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் காலை 10 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்தார். பின்னர் மதியம் சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் எடையுள்ள 4 மோதிரங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
இந்த திருட்டு குறித்து துரைராஜன் கே.கே. நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .
இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.