தமிழ் லுத்தரன் திருச்சபையின் 14வது பேராயர் தேர்தல். இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல். சி)யின் கவுன்சில் செயலாளர் மேகர் அந்தோணி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது :-
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி வருகின்ற 27,28,30 ஆகிய மூன்று நாட்களில் இரண்டு கட்டமாக டி.இ.எல்.சி யின் 14வது பேராயர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வாக்களிப்பவர்கள் குறித்து இன்று மாலை நிர்வாக குழு கூடி முடிவு செய்து பேராயர் தேர்தலுக்கான தேர்தலில் வாக்களிக்க உள்ள தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பட்டியல் வெளியிடப்படும்.
முதல் கட்டமாக 27ந் தேதி 240 பேரும்,
30 ந் தேதி இரண்டாம் கட்டமாக 525 பேரும் வாக்களிக்க உள்ளனர்.
பேராயர் தேர்தலில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆயர்கள் போட்டியிடலாம். வருகின்ற 30ந் தேதி 14வது பேராயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இதற்கு முன் 13வது பேராயராக இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து பேராயராக பணியாற்றி நிர்வாக குழுவை கலைத்து தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளார்.
அவர் திருச்சபைக்கு சொந்தமான பல்வேறு இடங்களை விற்பனை செய்து உள்ளதாக தெரியவருகிறது.
மேலும் திருச்சபைக்கு சொந்தமான மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு பலகோடி ரூபாய் முறைகேடு செய்து வேலை கொடுத்ததாக தகவல் தெரியவருகிறது.
எனவே அவர் மீது பல்வேறு ஊழல் முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் அவர் மீது விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி நிர்வாக குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது ஆலோசனைக்குழு உறுப்பினர்க ஆல்பர்ட் சுந்தர்ராஜ், வில்பர்ட் டேனியல், எஸ் ஆர்.எம்.யூ வீரசேகரன் ஆகியோர் அருகில் இருந்தனர்.