திருச்சி பென்வெல்ஸ் ரோடு
முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
1-தேதி பால் குடம், தீர்த்த குட ஊர்வலம் நடக்கிறது.
திருச்சி பென் வெல்ஸ் ரோடு முடுக்கு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால கணபதி, ஸ்ரீ கருப்பண்ணசாமி, பரிவார தெய்வங்களுடன் கூடிய ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 14ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடவு செய்து தொடங்கியது.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கிறது .பின்னர் மாலை 6 மணியளவில் கோர்ட் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி, பூத்தட்டுடன் பக்தர்கள் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
நாளை மறுநாள் ( சனிக்கிழமை )
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கஞ்சி வார்த்தல் விழா வெகு விமரிசையாக நடக்கிறது.
மேலும் வருகிற (ஞாயிற்றுக்கிழமை) காலை 4 மணி அளவில் குடமுருட்டி அய்யாளம்மன் கோவிலில் உள்ள படித்துறையில் இருந்து பால்குடம், தீர்த்தக் குடங்கள் எடுத்துக்கொண்டு பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர் .
பின்னர் அவர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 6 மணியளவில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வருகிறார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து உள்ளனர்.