பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன் இணைந்து கோவிட்-19 கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்) தடுப்பூசி முகாம் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரசிரியர். செல்வம் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு தடுப்பூசி முகாமுக்கு தலைமையேற்று துவக்கிவைத்தார்.
திருச்சி நவல்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பாலாஜி மேற்பார்வையில், மாவட்ட பொது சுகாதாரபணித்துறை இணை இயக்குனர் மருத்துவர் சுப்ரமணி வழிகாட்டுதலின்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் பேராசிரியர் தாஜுதீன் ஆகியோர் இந்த மூன்றாம் தவணை தடுப்பூசி முகாமுக்கு முன்னிலை வகித்தனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக முன் களப்பணியாளர்கள் ஆகிய பாதுகாவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை (Booster Dose) தடுப்பூசி ஆனது சமூக இடைவெளியை கடைப்பிடித்து போடப்பட்டது.
இந்த முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழகதின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் சிறப்புற ஒருங்கிணைத்தது இருந்தார்.
இந்த நிகழ்வின் தொடக்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழக பணியாளர் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலவச நீர் மோர் வழங்கும் திட்டத்தை பாரதிதாசன் பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் துணைவேந்தர் துவங்கி வைத்து பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நீர்மோரை வழங்கினார்.