ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர்.மக்கள் நீதி மய்யம் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி. மா.செ.வழக்கறிஞர் கிஷோர் குமார்.
மய்யத்தின் நேற்றைய கோரிக்கையும் இன்றைய ஆய்வும்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து மதுரை கள்ளழகர் மற்றும் தஞ்சை தேர்திருவிழாவின் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்தை போன்று அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் நடைபெறாதவாறு, மேற்படி தேர்திருவிழாவிற்கான பாதுகாப்பை மேம்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று [27.04.2022]ந் தேதி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
இதனை தொடர்ந்து இன்று [28.04.2022]ந் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் திருக்கோவில் செயல் அலுவலர் தலைமையில் அரங்கநாதசுவாமி திருக்கோவில் தேர்திருவிழாவின் பொழுது முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் எடுக்கவேண்டிய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
எனவே ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவில் தேர்திருவிழா தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை ஏற்று உரிய ஆய்வு நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகர காவல்துறைக்கும், திருக்கோவில் நிர்வாகத்திற்கும் மக்கள் நீதி மய்யம் தென் மேற்கு மாவட்டம் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கிறோம்.
என திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் கூறியுள்ளார்.