Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செயிட் ஜோசப் கல்லூரியில் கற்றல் மேலாண்மைத் தளம் தொடங்கப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் உள் தரமதிப்பீட்டுக் குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக, இக்கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்களும் தங்கள் பாடத்தின் ஒரு பாடத்தினை முற்றிலும் இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ்டெல் (JosTEL) என்கிற கற்றல் மேலாண்மை தளம் (LMS Portal) உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த JosTEL கற்றல் மேலாண்மைத் தளத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்காக 28-4-2022 அன்று கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர். ஆரோக்கியசாமி சேவியர் அவர்களால் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் உயர்கல்வியில் கற்றல் மேலாண்மைத் தளத்தின் பங்கு குறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனித வள மேம்பாட்டுப் பயிற்சி மையத்தினுடைய இயக்குநர் முனைவர். செந்தில்நாதன் சிறப்புரையாற்றினார்.

செயின்ட் சோசப் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியால் இந்த JosTEL என்கிற கற்றல் மேலாண்மைத்தளம் உருவாக்கப்பட்டடுள்ளது. ஒவ்வொரு துறையிலும் மாணாக்கர்களுக்கு வேலை வாய்புத்திறன் வளர்பிற்கு உதவும் வகையில் ஒரு பாடத்தை தேர்வு செய்து அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசியரியர்கள் பாடங்களுக்கான காணொளிகள் மற்றும் தரவுகளை உருவாக்கி இந்த கற்றல் மேலாண்மைத் தளத்தில் உள்ளீடு செய்துள்ளார்கள்.

மாணாக்கர்களின் கற்றலை உறுதிசெய்யும் விதத்தில் ஒவ்வோரு பாடத்திற்குப் பிறகும் இணையவழித் தேர்வுகள் நடத்தப்படும். இந்த கற்றல் மேலாண்மைத் தளத்தில் முதல்கட்டமாக கல்லூரியின் அனைத்து முதுகலை மாணாக்கர்கள் இணைந்து கற்கும் விதத்தில் மொத்தம் 20 சுயகற்றல் பாடங்களும் மற்றும் 10 மதிப்புக்கூட்டுப்பாடங்களும் தயாரிக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்ட்டுள்ளது.

பேராசிரியர்களுக்கு பாடத்திற்கான கானொளிகள், தரவுகள், தேர்வுகள் தயார் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு தாங்களாகவே 500க்கும் மேற்பட்ட காணொளிகளும் தரவுகளும் உள்ளீடு செய்யப்பட்டு மாணாக்கர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கற்றல் மேலாண்மைத் தளத்தை மாணாக்கர்கள் முழுமையாகப் பயன்படுத்த அவர்களுக்கும் போதிய தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்காலத்திற்குப் பிறகு கல்வித்துறையில் உலகலாவிய பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இக்கல்லூரி மாணாக்கர்களுக்கு உலகத்தரத்தில் பாடங்களைத் தங்கு தடையின் தாங்கள் விரும்பும் நேரத்தில் இருக்கும் இடத்தில் இருந்தே கற்றலைத் தொடர இந்த கற்றல் மேலாண்மைத் தளம் உதவுகிறது. மேலும் மாணாக்கர்கள் மத்தியில் சுய கற்றலை ஊக்குவித்து கல்வியில் சிறந்து விளங்க உதவுகிறது.

இந்தநிகழ்வில் கல்லூரியின் நிர்வாகிகள் அதிபர் அருள்முனைவர் லியோனார்டு பெர்னான்டோ, செயலர் அருள்முனைவர் பீட்டர், துணை முதல்வர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள், அனைத்துத்துறையின் பேராசிரியர்கள் மற்றம் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் அகதரமதிப்பீட்டுக் குழுத்தலைவர் முனைவர் ரோஸ் வெனிஸ் மற்றும் இணைத்தலைவர் குர்சித் பேகம் செய்திருந்தார்கள்.

பேராசிரியர்கள் முனைவர் ஜீடு நிர்மால், முனைவர் சேவியர் பிரதீப் சிங், முனைவர் விமல் ஜெரால்டு மற்றும் முனைவர் கேப்ரியேல் ரிச்சர்டு ராய் ஆகியோர் ஜோஸ்டெல் கற்றல் மேலாண்மைத் தளத்தை உருவாக்க தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.