ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இந்தத் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.4.2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 4ஆம்தேதி அன்று ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியானது.
அந்த அறிவிப்பில், தேர்வு ஜூன் 26ஆம் தேதி முற்பகலிலும் பிற்பகலிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது இந்தத் தேர்வு ஜூலை 2ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.