பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிக்காட்டுதல் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் ஆலோசனை படியும்,
தந்தை ஹேன்ஸ் ரோவர் (தன்னாட்சி)
கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் பெரம்பலூர் இணைய வழி குற்றப்பிரிவும் (cyber crime wing) இணைந்து நடத்திய ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியின் குளிர்மை அரங்கத்தில்
நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அவர் தனது சிறப்புரையில், “இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் பற்றியும், இணையவழி குற்றவியல் பிரிவு பற்றிய அறிமுகத்தையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது சிறப்புரையில், தற்போது இணையவழியில் நிகழும் குற்றங்கள் பற்றியும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் பெரம்பலூர் மாவட்ட துணை காவல் ஆய்வாளர் சிவமீனா இணையவழி குற்றங்கள் நடப்பதை காணொளி காட்சியாக விளக்கி மாணவர்களுக்கு காட்சிவழி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வில் ரோவர் கல்வி குழுமங்களின் தாளாளர் செவாலியர் வரதராஜன் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். துணைத் தாளாளர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் மு.ஜெயந்தி துவக்க உரை யாற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தமிழாய்வுத் துறை பேராசிரியரும், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் வீ.தனலட்சுமி நன்றி நல்கினார். தமிழ் ஆய்வுத் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு. முத்துமாறன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டு பயனடைந்தனர்.