திருச்சி மாவட்ட மைய நூலகத்தில்
டி என் பி எஸ் சி மாதிரித்தேர்வ.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் டி என் பி எஸ் சி மாதிரித் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட மைய நூலகம் தெரிவித்திருப்பது :
திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம் மற்றும் என்.ஆர்., ஐ.ஏ.எஸ். அகடமி இணைந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 2 , 2 ஏ மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வு ஏப்ரல் 25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய நிலவியல், இந்திய கலாச்சார வரலாறு, இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாடு வளர்ச்சி, நிர்வாகம் மற்றும் கணிதம் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. தேர்வு காலை 10 முதல் பகல் 1 மணி வரையில் இணைய வழியில் நடைபெறும்.
வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு
நடைபெறும். மாவட்ட மைய நூலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற மாதிரி தேர்வில் கலந்து கொண்டவர்கள் தவிர புதிதாக இத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 0431-2702242 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ள்.