உலக புத்தக தினத்தை முன்னிட்டு காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் வாசிப்பை நேசிப்போம் வானம் தாண்டி யோசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி.
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு வாசிப்பை நேசிப்போம் வானம் தாண்டி யோசிப்போம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்களுக்கான நூறு நாள் வாசிப்பு பயிற்சித் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது .
இந்த வாசிப்பு நிகழ்ச்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாகவும் புத்தகம் வாசித்தலை அதிகப்படுத்தும் விதமாகவும் மேற்கண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தாங்கள் வாசித்த ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றி மாணவர்கள் ஐந்து நிமிடங்கள் பேச வேண்டும் என்ற விதிமுறைக்கு உட்பட்டு எண்ணற்ற மாணவ மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். எண்ணற்ற மாணவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தங்கள் கருத்துக்களை மிகச்சிறந்த வகையில் வெளிப்படுத்திய மாணவர்கள் பரிசுக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்த இனிய நிகழ்ச்சிக்கு ஆசிரியர் தேவ சுந்தரி வரவேற்புரை ஆற்றினார். சத்யா முன்னிலை வகித்தார் .
தலைமை ஆசிரியர் கீதா புத்தக வாசிப்பின் நன்மைகளையும் பயன்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் .
நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் நிர்மலா நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது .மாணவர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் விதமாகவும் அவர்களின் சொல்லாற்றலை மேம்படுத்தும் விதமாகவும் நடத்தப்பட்ட இந்த நிகழ்வை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் கல்வியாளர்களும் பெரிதும் வரவேற்றனர்.