தமுஎகச மாநகர மாநாட்டையொட்டி முப்பெரும் விழா.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கவிஞர் இளங்குமரன் தலைமை தாங்கினார். விழாவில் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு ஓவியர் வெண்புறா பரிசுகளை வழங்கி துவக்க உரையாற்றினார்.
வாழ்நாள் சாதனையாளர்கள் விருதை பேராசியர் ஜூலியனுக்கு ஓவியர் வெண்புறா, ஓவியர் வெண்புறாவிற்கு எழுத்தாளர் சீத்தா ஆகியோர் வழங்கினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் கீரைத்தமிழன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியர் பாலின், மணிகண்டன், பூவிழி, சாய் மகஶ்ரீ, அன்பு மயிலா,சுரேந்தர் ஆகியோர் கவிதை வாசித்தனர் .
வெற்றி நிலவன் பாடல் பாடினார்.
மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நிறைவுரையாற்றினார்.
விழாவில் புதிய நிர்வாகிகளாக மாநகர தலைவராக இளங்குமரன், மாநகர செயலாளராக சிவ.வெங்கடேஷ், பொருளாளராக முருகேஷ்மணி, துணைத்தலைவர்களாக எழுத்தாளர் சீத்தா, பேராசியர் ஸ்டாலின், துணைசெயலாளராக ஓவியர் முத்துக்குமார், நடனகலைஞர் பிரதாப் மற்றும் 15 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிவ.வெங்கடேஷ் வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் நாகநாதன் நன்றி கூறினார்.