Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

0

 

விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் மரக்கன்று நடும் நிகழ்வு.

தமிழ் சினிமாவில் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்த மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துகளை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றியவர்.

மேடைகள் தோறும் கலாமின் கருத்துகளைப் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தார். மேலும், பசுமை காதலனான நடிகர் விவேக் மரம் நடுதலை தன் வாழ் நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும் விளங்கினார்.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதைப் பராமரிக்கவும் செய்திருக்கிறார்.

இயற்கையை நேசித்து, தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழகத்திற்கு வித்திட்ட நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று மக்கள் சக்தி இயக்கம், சார்பில் பொன்மலையடிவாரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், எஸ்.ஈஸ்வரன், வெங்கடேஷ், யோகேஷ், சுந்தர், தயானந்த் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.