ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 22ம் தேதி
தமிழக சட்டமன்றம் முற்றுகை.
முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் அறிவிப்பு .
முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மரு. பாஸ்கரன்,அல்லி முத்து,குரு மணிகண்டன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பேட்டி அளித்தனர் அப்போது அவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் 13 கோடி சீர்மரபினர்களுக்கு முதல்முறையாக பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி உதவியும் நிதி ஆயோக் மூலம் முத்தரையர்கள் உள்ளிட்ட 11 பூர்வீக பழங்குடியினரை ஆய்வு செய்ய நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும், முத்தரையர் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
கல்வி வேலைவாய்ப்புகளில் 2001 முதல் 2021 வரை அனைத்து ஜாதிகளும் பெற்ற பலன்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு உண்மையான ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தும் , வகுப்புவாரி, தொகுப்பு சம இடப்பங்கீடு வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது.
வலையர், அம்பலகாரர் புனரமைப்பு வாரியத்தை குறைகளை களைந்து உடனே அமல்படுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல போலி ஜாதி சான்றிதழ்கள் தடுப்பு சட்டம் கொண்டு வந்து வன்னியர்கள் என்று சட்டவிரோதமாக மதம் மற்றும் ஜாதி மாற்றம் செய்யப்பட்ட வன்னியர்கள் என்று போலி சாதிச்சான்றிதழ் வைத்துள்ள 15 லட்சம் முத்தரையர்களின் ஜாதி சான்றிதழ்களை ரத்து செய்து முத்தரையர் என உண்மையான ஜாதி சான்றிதழ் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.5 சதவீதம் ஒரு ஜாதி இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் பொய் பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 22ந்தேதி சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.