Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்களின் தொழில் முனைவோராக திறமைகளை வளர்க்கும் வேலைவாய்ப்பு மையம் தொடக்கம்.

0

'- Advertisement -

மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தாங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலை வாய்ப்பு மையம் – செயின்ட் ஜோசப் கல்லூரியில் துவக்கம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தாங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலை வாய்பை மாணவர்களிடையே உருவாக்கும் முயிற்சியில் பேராசிரியர்களின் துணை கொண்டு செயின்ட் ஜோசப் தொடக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும் தொடக்க விழாவானது கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Suresh

கல்லூரியின் செயலர் அருட் தந்தை. முனைவர் பீட்டர் முதல்வர் ஆரோக்கியசாமி, சேவியர் ஆகியோர் மையத்தை திறந்து வைத்தனர்.
சிறப்பு விருந்தினாராக
தேசியத் தொழில் நுட்பக் கழகத்தின் புல முதன்மையர் (ஆராய்ச்சி) முத்துக்குமார் கலந்து கொண்டு இத்திட்டத்தை குறித்து பாராட்டினார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் இவ்விழாவை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

கல்லூரியின் நிர்வாகத்தின் சிறு முதலீட்டில் மாணவர்களின் தொழில் திறனை வளர்த்து கொள்ளவும், ஆய்வு செய்யும் பொருட்களை புதிய தொழில் நுட்ப உத்திகளை கொண்டு உருவாக்கவும் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யவும் அதில் வரும் வருமானத்தை கொண்டு தங்களை முன்னேற்றவும் படுத்தவும், நேரத்தை சரியான வகையில் பயன் படுத்தவும் பகுதி நேர பணியாகயும் சுய தொழில் முனைவோராகவும் இத்திட்டமானது செயல்பட்டு கொண்டிருக்கும்.
விரிவாக்கத்துறை-செப்பர்டு மற்றும் வேதியியல், இயற்பியல், தாவரவியல் மனிதவள மேம்பாடு, வணிகவியல், தகவல் தொழில் நுட்பம், தரவு அறிவியல், மின்னுவியல் ஆகிய துறைகள் இணைந்து முருங்கை இலை பொடி, சூரண வகைகள், மின் காந்த சுழற்சி கருவி, எல் ஈ டி விளக்கு பெயர் பலகை, பல்ப் , பூச்சென்டு, கண்ணாடி ஒவியங்கள், கை சுத்திகரிப்பான், கிருமி நாசினியுடன் கூடிய வெப்பநிலை அறியும் கருவி டெலஸ்கோப் இயற்கை உரக்கலவை ஆகியவை மாணாக்கர்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தரத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தரவு பகுப்பாய்வு, இணையத்தள மேம்பாடு, ஜிஸ்டி தாக்கல், மாணவர்களுக்கான தொழில் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவையும் இம்மையத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில்
பேராசிரியர்களும் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.