Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காந்தி மார்க்கெட் சுமை பணி தொழிலாளர்கள் வேலைநிறுத்த விளக்க தெருமுனை கூட்டம்.

0

 

 

திருச்சி காந்தி மார்க்கெட் சுமைப் பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்த
விளக்க தெருமுனை கூட்டம்.

கட்டுமான, உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மின்சார சட்டத்திருத்தம், தொழிலாளர் நல சட்ட தொகுப்பு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29ம் தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் வரும் 27 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 28 ஆம் தேதி மாலை 6 மணி வரையும், குட்ஷெட், லாரி புக்கிங் ஆபிஸ், வாழைக்காய் மண்டி, சவுக்கு, மூங்கில் டெப்போ, டிரான்ஸ்போர்ட் பார்சல் சர்வீஸ், வேஸ்ட் பேப்பர், தமிழ்நாடு கிடங்கு, நாகப்பா, கண்டேன் வால், பிரிட்டானியா பிஸ்கட் குடோன், ஏ. கே.ஆர், ஏ.ஆர்.சி பார்சல் சர்வீஸ் ஆகியவற்றில் 28 ஆம் தேதி காலை 6 மணி முதல் 29-ந்தேதி காலை 6 மணி வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

 


இந்த வேலை நிறுத்த விளக்க தெருமுனை கூட்டம் இன்று காந்தி மார்க்கெட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விடுதலை தொழிலாளர் முன்னணி மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் ராமர், சிஐடியூ நிர்வாகிகள் தக்காளி ரமேஷ், சண்முகம், சின்னதுரை, பிரபு, பழனி, விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க நிர்வாகிகள்
செல்வகுமார், ஆல்பர்ட் ராஜ், சுரேஷ் ஆகியோர் பேசினர். இதில் காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.