ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வலியுறுத்தல்.
“ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவேண்டும்” மக்கள் நீதி மய்யம் தென் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வலியுறுத்தல்.
திருச்சி மாநகர காவல் சரகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவிற்கு என தனி, தனியாக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் இருந்தார்கள். இதனை தமிழ்நாடு காவல்துறை தங்களது நிர்வாக வசதிக்காக திருச்சி மாநகரை வடக்கு மற்றும் தெற்கு என இரு காவல் சரகங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் மேற்படி இரு காவல் சரகத்திற்கும் தலா ஒரு துணை ஆணையர் நியமிக்கப்பட்டு மாநகர காவல் ஆணையர் கார்த்திக்கேயன் அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மேலும் இதற்கு முன்பு ஸ்ரீரங்கம் காவல் சரகத்தில் சட்டம்-ஒழுங்கிற்கு ஒரு உதவி ஆணையரும், குற்றப்பிரிவிற்கு ஒரு காவல் உதவி ஆணையர் பணியிடங்கள் இருந்ததை தான் தற்பொழுது ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்கு சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவிற்கு என ஒரே காவல் உதவி ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அதி முக்கியத்துவமான பணியிடமான
ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையர்
பணியிடம் இன்று வரை நிரப்பபடாமல் இருப்பது உண்மையிலேயே வேதனையளிக்கிறது.
ஆண்டு முழுவதுமே விழா கோலமாக திகழும் உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி திருக்கோவில், அகிலம் போற்றும் அன்னை ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஷ்வர் திருவானைக்காவல் திருக்கோவில் மற்றும் உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட மிக முக்கியமான பரந்து விரிந்துள்ள ஸ்ரீரங்கம் காவல் சரகத்திற்கிற்கான உதவி ஆணையர் பணியிடம் நிரப்பபடாததை மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தென் மேற்கு மாட்டம் தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் அவர்களும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களும் திருச்சி மாநகர காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை மிக குறிப்பாக காலியாக உள்ள ஸ்ரீரங்கம் காவல் சரக உதவி ஆணையர் பணியிடத்தை உடனடியாக நிரப்பி பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தென் மேற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.
என மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தென் மேற்கு மாவட்ட வக்கீல்.S.R.கிஷோர்குமார் வலியுறுத்தி உள்ளார்.