இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின் சார்பில் முனைவர் ஜான். ராஜ்குமாருக்கு புனித சேவை செம்மல் விருது.
திருச்சியில் கிறிஸ்தவ போதகர்கள் மாநில மாநாடு நடைபெற்றது.
இதில் திருச்சியில் 32 ஆண்டுகள் ஆன்மீக சமூக சேவையாற்றி வரும் சமூக சேவகரும், போதகருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சேவையை பாராட்டி இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் வசந்தம் அரிமா சங்கத்தின் சார்பில் புனித சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
திருச்சி வசந்தம் அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர் டிஜிஆர் வசந்தகுமார் விருதை வழங்கினார். பேராயர்கள் சென்னை மார்ட்டின், மதுரை மத்திய மண்டல பேராயர் எஸ்டி நோவா, கோவை மண்டல பேராயர் எஸ். சார்லஸ், பட்டுக்கோட்டை, திருச்சியைச் சார்ந்த கிறிஸ்தவத் தலைவர்கள், பேராயர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.