திருச்சியில் பெர்ல் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற உலக பெண்கள் தின விழாவில் சிறந்த பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
உலக பெண்களுக்கான தினத்தை முன்னிட்டு, பெர்ல் அறக்கட்டளையின் சார்பாக திருச்சியில் தனியார் பள்ளியில் பெர்ல் அறக்கட்டளையின் இயக்குநர், நிறுவனர் மற்றும் அறங்காவலர், வழக்கறிஞர் டாக்டர். ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்
BREAK THE BIAS என்பதை மையக்கருத்தாக கொண்டு, சிறப்பு விருந்தினர்கள் கவிஞர் கவி செல்வா என்கிற செல்வராணி, டாக்டர் ஷீலா தேவி ஆகியோரை வரவேற்கும் வகையில் சிலம்பம், கைச்சண்டை, கத்திசண்டை 20க்கும் அதிகமான சிறுவயது பெண்கள் வரவேற்றனர்.
அருட்தந்தை.பீட்டர், அமல்தாஸ்,
அருட்தந்தை .ஜான் செல்வராஜ் கலந்து கொண்டு பெண்களுக்கென எதிராக உள்ள மூட நம்பிக்கைகளையும், திருநங்கைகளுக்கு எதிராக இருக்கும் சமூகப் பார்வைகளை களையும் வகையில் கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்.
பெண்களை சிறப்பிக்கும் வகையிலான சிறந்த விருதாளர்கள்
இருதய ராணி ,துணை நீதிபதி,வள்ளியூர், திருநெல்வேலி அவர்களுக்கு டாக்டர். அம்பேத்கார் விருந்தினையும்
ராஜேஸ்வரி, இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ்,
பட்டினப்பாக்கம், சென்னை, நவீன ஜான்சி ராணி விருதும்,
டாக்டர்.மதுமிதா கோமதிநாயகம், இந்தியாவின் முதல் திருநங்கை, HR, மானேஜர், பெரியார் விருதும், அருட்சகோதரி.
பிச்சை மேரி @ரெசிபிசியஸ்,மேரி, புனித அன்னாள் சபை,அன்னை தெரசா விருதும், மோலி ஆண்டனி நிர்வாகி,செல்லாஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் விருதும்,
J.பவுலின் சோனியா ராணி, இவர்கள் நைட்டிங்கேல் விருதும்,
வேலுநாச்சியார் விருது நிர்மலா பாலு ஷ மேனேஜிங் வுமன்&சில்ட்ரன் லைவ்லிஹூட் டிரஸ்ட், கரூர்,இவர்களுக்கு வேலு நாச்சியார் விருதும் ,
மேலும் திருநங்கை.கஜோல் , திருநங்கைகளின் எழுச்சி பேச்சாளர், அவர்களுக்கு கலைஞர் விருதும்,
விருதாளர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தியும், சந்தன மாலைகள் அணிவித்தும், சான்றிதழ்கள் வழங்கியும்,
தலையில் பரிவட்டம் முடிசூடியும் கௌரவிக்கப்பட்டார்கள்.
விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருங்கைகளில் சிலர் பாடல்களைப் பாடி தங்களுடைய மனக்குமுறல்களையும், இன்னும் வாழ்விற்காக உழைக்க வேண்டிய முக்கியமான சில கருத்துகளையும் பதிவு செய்தனர் மற்றும் இதில் பெண் வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.