திருச்சி புத்தூர் சிந்தாமணி நியாய விலை கடையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இவவசமாக தரவேண்டிய வேட்டி சேலைகள் பொங்கல் பண்டிகை முடிந்த பின் தான் நியாயவிலை கடைகளுக்கு வந்து சோர்ந்தது.
பொதுமக்களும் 21 பெருட்கள் அடங்கிய பொங்கல் இலவச பையை பெற மட்டுமே ஆர்வம் காட்டினர்.
ஆனால் இந்த இலவச வேட்டி சேலை பெற மறந்துவிட்டனர்.
இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச வேட்டி சேலைகள் அப்படியே தங்கிவிட்டது.விற்பனையாளர்களும் அதனை மக்களுக்கு வழங்க எண்ணவில்லை.
இந்நிலையில் புத்தூர் சிந்தாமணி நியாய விலை கடையில் தராமல் விட்டதால் தேங்கிக்கிடக்கும் வேட்டி சேலையை மாலை 7 மணி வரை கடையைத் திறந்து வைத்து துணி கடை வியாபாரிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் விற்பனை செய்ததை கடந்த இரண்டு நாட்களாக 2, 3 பேர் இருசக்கர வாகனத்தில் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்து சென்றனர்.
இதனை கண்ட பொதுமக்கள் ஆட்கள் நடமாட்டம் உள்ள இந்தப் பகுதியில் அனைவரும் முன்பு வேட்டி சேலைகளை கடத்துபவர்கள் மற்ற அரிசி | பருப்பு, எண்ணெய், ஜீனி போன்ற அத்தியாவசிய பொருட்களை என்ன செய்வார்கள் என பேசியபடி சென்றனர்.