4மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றி.திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அவற்றில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியினர் மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பின் மாவட்டத் தலைவர் ராஜசேகரன், தலைமையில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்து கொண்டு பஸ் பயணிகள், சாலையோர வியாபாரிகள், வாகனங்களில் செல்வோர் என அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அவர்களை போலீஸ் உதவி கமிஷனர்கள் அஜய்தங்கம், காமராஜ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.
அதைத்தொடர்ந்து மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக நடத்து புறப்பட்டனர். ஊர்வலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக பாரதியார் சாலை, தலைமை தபால் நிலையம் அருகே வரை சென்று அங்குள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் முடிந்தது. பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.