4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை ஸ்ரீரங்கத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.
இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.

இந்த நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து இந்த வெற்றியை நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்
இந்த வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். வியாபாரிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் உள்ளிட்டோருக்கு பாஜகவினர் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர்.
இதில் முன்னாள் மண்டல் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல், நடராஜன் மு.ரா.பி.மா.த, பார்த்திபன் மாநில செயற்குழு உறுப்பினர், சர்வேஸ்வரன் முன்னாள் திருவரங்க மண்டல் தலைவர், மு.திருவேங்கடம் யாதவ் கோ.வி.அ.தி.பி.பொறுப்பு.
ஹேமா திருவரங்க மண்டல் மகளிரணி செயலாளர், மைதிலி முன்னாள் மண்டல செயலாளர், அசோக் முன்னாள் மண்டல் பொது செயலாளர், ஆர்.என்.உஜ்ஜுவி நாதன் கல்விப் பிரிவு மாவட்ட செயலாளர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.