தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தற்பொழுது உள்ள நிர்வாகிகள் ஓராண்டு நீட்டிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை பிரிவு தற்சமயம் நிதித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது அதற்கு இச்சங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
காலியாக உள்ள பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தின் வாயிலாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் அன்பழகன், இணைச் செயலாளர் மகேஷ், அமைப்பு செயலாளர் கருணாமூர்த்தி , மண்டல தணிக்கை அலுவலர்கள் மாணிக்கவேல், முருகன், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.