Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தேசியக் கல்லூரியில் 2019-20ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

0

'- Advertisement -

திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

2019-2020ஆம் கல்வியாண்டுக்கான பட்டமளிப்பு விழா நேற்று மாலை கல்லூரியின் திறந்தவெளி அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது.

டாக்டர்.N.S. பிரசாத், உறுப்பினர் கல்லூரி ஆட்சிமன்ற குழு தலைமை தாங்கினார்.

ராம் பிரவீன் சாமிநாதன் தலைமை இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மகேந்திரா லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். இவர் சுமார் 20 ஆண்டு காலம் பல பன்னாட்டு வணிக நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.
மேலும் மோட்டார், எரிசக்தி, மற்றும் காகிதம் ஆகிய துறைகளில் தனிமுத்திரை பதித்துள்ளார். டாட்டா நிறுவனங்களில் தனது தொழில் பயணத்தை ஆரம்பித்த இவர் கம்மின்ஸ் இன்க், இன்டர்நேஷனல் பேப்பர் கம்பெனி மற்றும் சிண்டலர் எலெட்ரிக் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.

Suresh

விழா இறைவணக்கதோடு ஆரம்பித்தது. கல்லூரி முதல்வர் முனைவர் சுந்தரராமன், அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.

டாக்டர்.N.S. பிரசாத், விழாவை துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் தன்னுடைய பட்டமளிப்பு விழா பேருரையில், வேலை வாய்ப்புக்கான கல்வியின் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார். மேலும் மாணவர்கள் அனைவரும் தொழில்முறை கல்வியில் அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஏனென்றால் இக்கல்லூரி பல தலைவர்களை உறுவாக்கியது என்றார். பட்டம் பெறவுள்ள மாணவர்களை கீழ்கண்ட ஆறு விஷயங்களை வாழ்க்கையில் கடைபிடிக்குமாறு கூறினரர் 1. குழப்பம் 2. ஆர்வம் 3. கடின உழைப்பு 4. நன்றியுணர்ச்சி 5. பணிவு 6.உற்சாகம் நிறைவாக பட்டம் பெறப்போகும் மாணர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்தி அமார்ந்தார். அடுத்தாக அனைத்து துறை தலைவர்களும் பட்டம் பெறவுள்ள மாணவர்களின் பெயர்;களை வாசிக்க அவர்கள் சிறப்பு விருந்தினர்களிடம் தங்களுடைய பட்டங்களை பெற்றுக் கொண்டனர். நிறைவாக கல்லூரி முதல்வர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உறுதிமொழி எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் 1177 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 869 இளங்கலையும் 182 முதுகலையும், 126 இளநிலை ஆய்வாறிஞர் பட்டமும் மொத்தம் 19 துறைகளில் இருந்து பெற்றுக் கொண்டனர். இதில் 309 மாணவர்கள் ‘இன் ஆப்சென்சியாக’ தங்களுடைய பட்டத்தை பெற்றனர்.

இளநிலை பட்டத்தில் கிழ்கண்ட 18 மாணவர்கள் பல்கலைகழக தரவரிசை தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 1. பிருந்தா. (B.ComCA), 2. கிருபா ராணி.(B. Lit) 3. பாரத்குமார்.(Commerce) 4. கோபி.(BBA) 5. அக்ஷரா வர்மா(English) 6. ஹரிணி லதா. (BCA) 7. ஜஸ்வர்யா. (BioTech) 8. கீர்த்தனா. (Botany) 9. பாலாஜி. (Chemistry) 10. தினேஷ்குமார். (Computer Science), 11. மீனா. (Economics) 12. சைனி பெலிஷிடா.ச (Geology) 13. அனிதா. (Mathematics) 14. நிவாஷ. (Physical Education) 15. வினோதினி.ம (Physics ), 16. பிரமிளா(Tamil ) 17. சிவசங்கரி (Zoology) 18. சிரஞ்சிவி (Hystory). இவர்களில் சிவசங்கரி (Zoology) பல்கலைகழக தரவரிசையில் முதன்மையாக தேர்ச்சிபெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

முதுகலை பட்டத்தில் கிழ்கண்ட 10 மாணவர்கள் பல்கலைகழக தரவரிசை தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். 1. சுபாஷினி. ( Commerce) 2. கவின்Botany) 3. சேளமியா (Chemistry) 4. வைஷலி. (Computer Science)) 5. சுகன்யா (Economics) 6. பிரசன்னா (English) 7. பாண்டிஸ்வரி (Mathematics), 8. வனிதா(Physics) 9. அருள்பிரகாஷம் (Tamil) 10. கோகிலா.Zoology)

இளநிலையில் 2017-2020ம் கல்வி ஆண்டில் 1200 மாணவர்கள் தேர்வு எழுதி 1079 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதுநிலையில் 2018-2020ம் கல்வி ஆண்டில் 270 மாணவர்கள் தேர்வு எழுதி 213 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 185 மாணவர்கள் கல்லூரி வளாக நேர்முக தேர்வில் பலதுறையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.