திருச்சியில்
போலீஸ் எனக்கூறி பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிப்பு. டிப்டாப் ஆசாமிகள் தலைமறைவு.
திருச்சி கிராப்பட்டி பாரதி மின் நகரைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி முனியம்மாள். (வயது 70). இவர் சன்னியாசர் கோவில் தெருவில் முதியோர் உதவித்தொகை வாங்கிவிட்டு ,வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த டிப்டாப் ஆசாமிகள் இரண்டு பேர் முனியம்மாளிடம் நீங்கள் நகை அணிந்து கொண்டு இப்படி செல்வது தவறு. யாராவது பறித்து விடுவார்கள் .
நாங்கள் இருவரும் போலீஸ்காரர்கள் எனக்கூறி மூதாட்டியிடம் அந்த நகையை வாங்கி,ஒரு பையில் வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். வீட்டுக்கு வந்து முனியம்மாள் பையை பார்த்தபோது ,நகை இல்லாதது கண்டு திடுக்கிட்டார் .
உடனே இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் கொடுத்தார் .
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து போலீஸ் என கூறி மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி, நகையை பறித்துச் சென்ற டிப் டாப் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

